தெரிந்த கேள்விகள் தெரியாத பதில்கள் - 3 குபேரன் பற்றி


குபேரனைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா??

1.
குபேரன் தோன்றிய நாள், நட்சத்திரம் எது?
2.
குபேரனுக்கு உகந்த நைவேத்தியம் எது?
3.
குபேர விக்ரஹம் உள்ள் புகழ் பெற்ற இடம் எது?
4.
திருமங்கலத்தின் சிறப்பு என்ன?
5.
குபேரனுக்கு தனிக்கோவில் உள்ளதா?


பதில்கள்

1.
குபேரன் தோன்றிய நாள் - வியாழக்கிழமை, நட்சத்திரம் - பூசம்.
2.
குபேரனுக்கு உகந்த நைவேத்தியம் : ஏலக்காய், கிராம்பு போனற வாசனை திரவியங்கள் கலந்த பால்.
வெல்லம்/சர்க்கரை போன்றவையும் லக்ஷ்மி குபேர பூஜையில் வைக்கப்படுவதாக so-hum பின்னூட்டப் பகுதியில் சொல்கிறார்.
3.
நாசிக் (இந்தியாவில் பணம் அச்சடிக்கும் இடம்).

4.
தமிழகத்தில் திருமங்கலத்தில் (மதுரை) தான் முனீஸ்வரர் கோவிலில் குபேர விக்ரஹம் தனியாக உள்ளது.

5.
குபேரனுக்காக பொதுவாக தனிக்கோவில் கிடையாது. சிவன் கோவில்களில் அவருடைய சிலையைக் காணலாம்.