தெரிந்து கொள்வோமே - விநாயரைப் பற்றி - 2


1.விநாயகர் யாரை சம்ஹாரம் செய்து மூஞ்சூரை வாகனமாகக் கொண்டார்? எங்கு?
2.
ஒளவையாருக்கு மூப்பு அளித்தது யார்?அவரை ஒளவையார் எந்த ஊரில வணங்கி வந்தார்?
3.
சிதம்பரத்தில் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள விநாயகரின் பெயர்கள் என்னென்ன?
4.
விநாயகரை மருத, அகத்தி, இலந்தை மற்றும் துளசி இலையால் அர்ச்சித்தால் என்ன பலன் கிடைக்கும்?
5.
சிந்தாமணி கணபதி - பெயர்க்காரணம் தருக
6.
சஷ்டி கணபதி - பெயர்க்காரணம் தருக
7.
மியான்மார் நாட்டில் விநாயகர் எப்படி அழைக்கப்படுகிறார்?
8.
மங்கோலியா நாட்டில் விநாயகர் எப்படி அழைக்கப்படுகிறார்?
9.
கம்போடியா நாட்டில் விநாயகர் எப்படி அழைக்கப்படுகிறார்?
10.
சீனா நாட்டில் விநாயகர் எப்படி அழைக்கப்படுகிறார்?
11.
ஜப்பான் நாட்டில் விநாயகர் எப்படி அழைக்கப்படுகிறார்?
12.
பிள்ளையார்பட்டியில் உள்ள விநாயகரின் பெயர் என்ன?

விடைகள்:
1.
கஜமுகாசுரன் - திருச்செங்காட்டங்குடி
2.
விநாயகர். ஒளவையார் அவரை தினமும் திருக்கோவலூரில் வழிபட்டு வந்தார்.
3.
சிதம்பரம்- கற்பக விநாயகர்.
பாண்டிசேரி- மணக்குள விநாயகர்
4.
மருத இலையால் அர்ச்சித்தால் மகப்பேரு எற்படும்
அகத்தி இலையால் அர்ச்சித்தால் துயரம் விலகும்
இலந்தை இலையால் அர்ச்சித்தால் கல்வி மேம்படும்.
துளசி இலையால் அர்ச்சித்தால் நல்வாழ்வு ஏற்படும். ஆனால் அவருக்கு துளசி இலை ஆகாது என்றும் சொல்வார்கள். ஏனென்று விளக்கம் அறிந்தால் சொல்லவும்
5.
கபில முனிவருக்கு சிந்தாமணியை திரும்பப் பெற உதவியதால்  இப்பெயர்.
6.
கந்த சஷ்டியில் முருகனுக்கு உறுதுணையாய் இருந்ததால் இப்பெயர்.
7.
மியான்மாரில் - மஹாபீனி
8.
மங்கோலியா - தோத்கார்
9.
கம்போடியாவில் - பிராகனேஸ்
10.
டூ ஆன்ஷி டியின்
11.
வினாயஷா (also, Kangi-ten or Daishô Kangi-ten (god of joy and harmony), or again Shôten-sama or Tenson-sama as said by Om Tat Sat in the comment section)
12.
தேசிக விநாயகர் - பிள்ளையார்ப்பட்டியில்.