தெரிந்து கொள்வோமே!! - நீர்


1. ஸநானம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
2.
ஆக்நேய ஸ்நானம் என்பது என்ன?
3.
மானச ஸ்நானம் எனபது என்ன?
4.
மிருத்திகா ஸ்நானம் எனபது என்ன?
5.
பாற்கட்லில் இரண்டாவதாக (முதலில் ஆலகாலம்) வந்தவை எவை?
6.
வில்வம் எப்படித் தோன்றியது?
7.
ஆமல தீர்த்தம் எனபது என்ன?
8.
கங்கா ஸ்நானம் செய்வதின் சிற்ப்பு என்ன?
9.
தீர்த்தம் கொடுக்கப்ப்டும் சிவன் கோவில் எது?
10.
கடல்நுரையால் ஆன பிள்ளையார் எங்கு உள்ளார்?
விடைகள் :
1. 6
வகைப்படும்.
நித்தியம் - தினமும் குளிப்பது
நைமித்திகம்- தீட்டு நீங்க ஸ்நானம் செய்வது.
காமியம் - கிருத்திகை போன்ற நாட்களில் புண்ணிய நீராடுதல்.
கிரியாங்கம் - பித்ரு காரியங்களின் பொருட்டு நீராடுதல்
மலாபகர்ஷணம்- எண்ணை தேய்த்துக் குளித்தல்
கிரியா ஸ்நானம் - புண்ணிய நதி, தீர்த்தங்களில் நீராடுதல்
இவை தான் அந்த ஆறு வகையா எனபதில் எனக்கு ஐயம் உள்ளது. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லவும்.
2.
உடம்பெங்கும் விபூதியை அணிந்து கொள்வது.
3.
பிரணவ தியானம்.
4.
திரு மண்ணை (ஆலயங்கள் போன்ற இடங்களில் உள்ள) உடம்பெங்கும் பூசிக்கொள்வது.
5.
காமதேனு; உசசைஸ்ரவஸ் என்ற வெள்ளை குதிரை
6.
பாற்கடலில் தோன்றிய மகாலட்சுமியின் கைகளில் இருந்து வந்தது
7.
காவி ரியைக் குறிக்கும்
8. 10
அஸ்வமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்கும்
9.
இராமேஸ்வரம்.
10.
திருவலஞ்சுழி