தெரிந்து கொள்வோமே -16 அழகு!!


இம்முறை அழகு என்பதை அடிப்படையாகக் கொண்ட சில கேள்விகள் இங்கே!!
1.
திருவாரூரில் எது அழகு?
2.
திருவிடைமருதூரில் எது அழகு?
3.
மன்னார்குடியில் எது அழகு?
4.
தஞ்சாவூரின் பழைய பெயர் என்ன?
5.
முருகு என்பதன் பொருள் என்ன?
6.
மன்மதனின் அம்புகளின் பெயர் என்ன?
7.
பெண்டிற்கு அழகு என்ன என்று ஒளவையார் கூறியுள்ளார்? எதில்?
8.
அழகின் சிரிப்பு- இதை எழுதியவர் யார்?
9.
அழகு அலைகள் என்று பொருள் படும் ஆதிசங்கரரின் படைப்பு எது?
10.
அழகர் என்பது யாரைக் குறிக்கும்?அழகர் கோவில் உற்சவர் பெயர் என்ன?
விடைகள்:
1.
திருவாரூரில் தேர்
2.
திருவிடைமருதூரில் தெரு
3.
மன்னார்குடியில் மதில்
4.
த்ஞ்சாவூர் - அழகாபுரி
5.
அழகு
6. 5
மலர் அம்புகள் - தாமரை அம்பு, மாம்பூ அம்பு, அசோக மலர் அம்பு,முல்லை அம்பு, நீலோற்பல அம்பு
7.
உண்டி சுருங்குதல். கொன்றை வேந்தன்.
8.
பாரதிதாசன்
9.
சௌந்தர்ய லஹரி
10.
திருமால். சுந்தரராஜப் பெருமாள்.