
இப் பணியிடங்களுக்குப் போட்டியிடுபவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். ஆனால் மற்ற பணியிடங்களுக்கு இந்தியக் குடிமகனாகவோ அல்லது நேபாளத்தில் இருந்து வந்தவராகவோ இந்திய வம்சாவளியாளராக பாகிஸ்தான், பர்மா, இலங்கை, கிழக்கு ஆப்ரிக்கா நாடுகளான கென்யா, உகாண்டா மற்றும் தான்சானியா, ஜாம்பியா, மலாவி, ஐயர், எத்தியோப்பியா மற்றும் வியட்நாம் முதலிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் நோக்கத்துடன் இந்தியாவில் வந்து குடியமர்ந்தவர்கள் இப் பணிகளுக்குப் போட்டியிடலாம்.
வயது வரம்பு- விண்ணப்பதாரர் 21 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். ஆனால், 30 வயது பூர்த்தியாகியிருக்கக் கூடாது. அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகளுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பழங்குடியினருக்கும் தளர்த்தப்படுகின்றது. பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 3 ஆண்டுகள் அதிக பட்ச வயது வரம்பில் தளர்த்தப்படுகிறது.
கல்வித் தகுதி- விண்ணப்பதாரர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துத் தொழில்நுட்பப் பட்டங்களும் மற்றும் மருத்துவத்துறையில் (M.B.B.S) பட்டம் பெற்றிருப்பின் இன்டர்ன்ஷிப் முடித்திருக்க வேண்டும்.
இத் தேர்வினைப் பொறுத்த வரை நான்கு முறைகள் ஒருவர் தேர்வு எழுத அனுமதி உண்டு. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கும் இத் தேர்வுகள் வயது வரம்புக்குட்பட்டு ஏழு முறை எழுத அனுமதி உண்டு.
விண்ணப்பதாரர் ரூ. 50-க்கான சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் ஸ்டாம்பினை விண்ணப்பத்தில் விண்ணப்பக் கட்டணமாக ஒட்ட வேண்டும். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களைப் பொருத்த வரை ஹை கமிஷனர் அலுவலகம் அல்லது இந்திய தூதரகத்தில் கீழ்காணும் கணக்குத் தலைப்பின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை 051- Public Service Commission - Examination fees செலுத்தி அதன் ரசீதை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் மட்டும் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றனர். மேலும் உடல் ஊனமுற்றவர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதற்கான மருத்துவச் சான்றின் நகலினை இணைக்க வேண்டும். ஆனால் அவர்கள் மருத்துவ ரீதியாக இப்பணிகளுக்குத் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவங்களைப் பட்டியலிட்ட தபால் நிலையங்களிலிருந்து ரூ.20-ஐ செலுத்தி விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை Secretary, Union Public Service Commission, Dholput House, New Delhi - 11. என்கிற முகவரிக்குக் குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்ப வேண்டும்.








